காவிரி நீர் தமிழகம் வந்தது

0
288


கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்தது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையிலிருந்து விநாடிக்கு 4,900 கன அடி நீரும், கபினியிலிருந்து 3,500 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக உள்ளது. 84 அடி கொள்ளளவு கபினி அணையின் நீர் மட்டம் 69 அடியாக இருக்கிறது. இரு அணைகளுக்கும் வரும் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு 8 ஆயிரத்து 400 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. 

இந்நிலையில், கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் வரும் நாட்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here