காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?

0
265

நீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு பதிவு செய்ய வேண்டும்.நீர் இருப்பு, நீர்வரத்து, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை கணக்கிட வேண்டும்

மேட்டூர் உள்ளிட்ட அனைத்து மாநில அணைகளும் காவிரி அமைப்பின் வழிகாட்டுதலின் படி இயக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் அதிகாரம் குழுவுக்கு அளிக்கப்படும்.தேவைப்பட்டால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குழுக்களை அமைத்து கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர் என வரைவு திட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின்கட்டுப்பாட்டில் இருக்கும். நீர் திறப்பு காலங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும்.

மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார். 10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்.
10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Courtesy : Dinamani

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்