காவிரி ஆணையமா, குழுவா, வாரியமா, என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த மத்திய அரசு கோரிக்கை

Centre submits draft Cauvery management scheme in Supreme Court

0
165

காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தது. காவிரி விவகாரத்தில் வாரியம், குழு அல்லது ஆணையம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர் வளத்துறை செயலாளர்
யூ.பி சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.

வரைவுத் திட்டத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

*நீர்ப் பங்கீட்டு அமைப்பு 10 பேர் கொண்டதாக உருவாக்கப்படும்.

* காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும்.

*ஒவ்வொருமாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இருப்பார்

*காவிரி வாரியமா, குழுவா, ஆணையமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.

* மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி
அமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார்.

* 10 பேர் கொண்ட நீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்.

*10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவர்

*காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் படைத்த அமைப்பாக இது இருக்கும் என வரைவுத் திட்ட
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டிக்கு சாதகமாக தீர்ப்பு வர நீதிபதிக்கு 100 கோடி லஞ்சம் ; காங்கிரஸ் வெளியிட்ட வீடியோ

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்