அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களுரூவில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (ஏப்.27) வெளியிடப்பட்டது. மங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதனை வெளியிட்டார். இதில் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, 18 முதல் 23 வயதுவரை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், கல்லூரிகளில் இலவச வை-பை, காவிரியிலிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இது கர்நாடக மக்களின் மன்கிபாத் (மனதின் குரல்) என்றும், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”