சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை (நேற்று) தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சனிக்கிழமை (நாளை) ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) முதல் சென்னை அணியின் போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், சென்னையில் போட்டிகள் தொடங்கவுள்ள ஏப்.10ஆம் தேதியன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

cauvery

மேலும் இளைஞர்கள் சிலர், சென்னையில் வரையப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளம்பரங்களைத் திருத்தி, ”ஐபிஎல் வேண்டாம், காவிரிதான் வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்: ’15 பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்