காவிரியில் ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 71 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 33 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு நிலவரப்படி ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் 9-ஆவது நாளாகத் தடைவிதித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதிக்கக்கூடாது என விடுதி உரிமையாளர்களிடம் காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரையுள்ள கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனிடையே, வியாழக்கிழமை முதல் மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here