காவல் துறையினருக்கும் ஓய்வு: கமல்ஹாசன் டிவீட்

0
102

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசுஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்கவேண்டும் என்று மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், “காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு.

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here