தமிழக அரசு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தினசரி செய்தித்தாள்களில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, செய்திகள் வராத நாளே இல்லை, மக்களின் உயிர் உடமைகளுக்கு பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையில் காலி பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டும். நிர்வாக வரைமுறைப்படி ஒரு காவலர் 505 மக்களுக்கு பாதுகாப்பு பொறுப்பு மேற்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள் : ’காவல்துறை, சிறைத் துறை, கிரிமினல்களின் கூட்டணி குறித்து விசாரிக்கவேண்டும்’

காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தற்போது ஒரு காவலர் 609 பேருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். காவலர்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பணியில் தாமதம் ஏற்படுகிறது, இதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகரில் 137 காவல் நிலையங்களும், 63 போக்குவரத்து காவல் நிலையங்களும் உள்ளனர். தினசரி 15 முதல் 20 வரையிலான புகார் மனுக்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெறப்படுகிறது. போதிய எண்ணிக்கையில் காவலர்கள், அதிகாரிகள் இல்லாததால் துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆகிறது. தமிழக மக்கள் தொகை 7,21,47,030. தமிழக காவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கை 1,35,830.

இதையும் படியுங்கள் : ”நீதிபதிகள் இல்லாமல் நீதிமன்றங்கள் காணப்படுகின்றன”: நீதிபதிகள் நியமனம் குறித்து மத்திய அரசை சாடிய டி.எஸ்.தாக்கூர்

ஆனால் பணியில் உள்ள காவலர்களின் எண்ணிக்கை 98,500. காலி பணியிடங்கள் 37,330. மக்கள் தொகை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டேபோகிறது, குற்றங்களும் அதிகரித்து கொண்டே போகிறது. கூலி படையினரின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தமிழக அரசு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பி, கூடுதலாக காவலர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

1 கருத்து

ஒரு பதிலை விடவும்