காலா விவகாரம் – பதிலளிக்க ரஜினி, தனுஷுக்கு நீதிமன்றம் ஒருவார கால அவகாசம்

0
216

காலா படத்தின் கதை என்னுடையது என்று போரூரைச் சேர்ந்த கே.ராஜசேகரன் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க ரஜினி, தனுஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு ஒருவார கால அவகாசம் அளித்துள்ளது நீதிமன்றம்.

ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், ரஜினியிடம் காலா படத்தின் கதையை அவரது வீட்டில் வைத்து கூறியதாகவும், 1996 இல் கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து கரிகாலன், உடன்பிறவா சகோதரி பெயர்களை வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் காலா படத்தின் மூலக்கதையும், படத்தின் பெயரும் எனக்கே சொந்தம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரஜினி, தனுஷ், ரஞ்சித் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி, தனுஷ், ரஞ்சித் ஆகியோர் பதிலளிக்க மேலும் ஒருவார கால அவகாசம் அளித்து பதிலளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையும் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: விமர்சிப்பவர்களை தேசத்துரோகி என்பதுதான் பா.ஜ.கவின் ஸ்டைல்”: குஷ்பு விமர்சனம்

இதையும் படியுங்கள்: பாகுபலி தேசிய அளவு என்றால் சங்கமித்ரா சர்வதேசியம்

இதையும் படியுங்கள்: ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் தொடரும் குழப்பங்கள்

இதையும் படியுங்கள்:ராணுவ ஜீப்பில் அருந்ததி ராயை கட்டி வைக்கலாம்’: பாஜக எம்.பி.யின் கருத்தால் சர்ச்சை

இதையும் படியுங்கள்: Lalit Modi case exposes Chennai Police Commissioners’ shameful cover-ups

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்