காலா படத்துக்கு அதிக டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது.

சில மல்டிபிளக்ஸ்கள் தவிர மற்ற அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயித்ததைவிட பல மடங்கு விலை வைத்தே காலா டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. பல திரையரங்குகள் தங்களின் பார்க்கிங் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளன. இதனை எதிர்த்து தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காலா படத்துக்கு கூடுதல் டிக்கெட் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மக்கள் மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது.

ஆனால், இன்றும் திரையரங்குகள் கூடுதல் டிக்கெட், பார்க்கிங் கட்டணத்தையே வசூலிக்கின்றன. தமிழக அரசு நீதிமன்றத்தின் உத்தரவை காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்