காலாவைப் பார்த்து கவலையில்லை – ‘தில்’ தெலுங்கு படவுலகம்

0
216
Pa Ranjith & Rajinikanth

ஷங்கரின் 2.0 படத்தின் வெளியீட்டை ஜனவரியிலிருந்து ஏப்ரல் 27 க்கு மாற்றி அறிவித்தபோது தெலுங்கு படவுலகில் சலசலப்பு எழுந்தது. ஏப்ரல் 27 மகேஷ்பாபுவின் பரத் அனு நேனு படத்தையும், அல்லு அர்ஜுனின் நா பேரு சூர்யா படத்தையும் வெளியிடுவதாக இருந்தனர். 2.0 வெளியானால் மொத்த திரையரங்கையும் அது எடுத்துக் கொள்ளும், ரசிகர்களின் கவனமும் அந்தப் படம் மீதே இருக்கும் என்பதால் தெலுங்குபட தயாரிப்பாளர்கள் கவலையடைந்தனர். இப்படி திடீரென்று ரிலீஸ் தேதியை மாற்றினால் நாங்கள் என்ன செய்வது என்று போர்க்கொடி தூக்கினர்.

கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் ஏப்ரல் 27, 2.0 வெளியாகப் போவதில்லை. இது தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு நிம்மதியை கொடுத்தது. அதேசமயம், அதே ஏப்ரல் 27 ரஜினியின் இன்னொரு படமான காலாவை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். காலா தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. ஆனால், காலாவை தெலுங்கு தயாரிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை. 2.0 ஏற்படுத்திய பயம் அவர்களுக்கு காலாவிடம் இல்லை.

கபாலி படம் தெலுங்கில் சரியாகப் போகவில்லை. காலாவும் ஷங்கர் படம் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு. அதனால் ஏப்ரல் 27 தங்கள் படங்களை வெளியிடுவதில் உறுதியாக உள்ளனர்.

ரஜினியாக இருந்தாலும் அவர் ஏறி வருவது யானையா குதிரையா என்பதைப் பொறுத்தே மரியாதையும் பயமும் கொள்கிறார்கள் திரையுலகில்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: ’இதில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2வது இடம்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்