தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்குப் பின்னர் அக்டோபர் 2 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை காந்தியின் 150 வது பிறந்த தினத்தையொட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறைமாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது. மேலும், காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் தொடர்ந்து 5 நாட்கள் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 320  ஆசிரியர்களைக் கொண்டு, Etoos India மூலம் 413 மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஸ்கிரீனிங் தேர்வு நடத்தப்படும் என்றும் ஸ்கிரீனிங் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அடுத்தக் கட்டபயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் 18,000 மாணவர்கள் பயன் பெறவுள்ளனர். காலை 9.30 மணிமுதல் 12.40 வரையிலும், பிற்பகல் 1.10 மணி முதல் மாலை 4.20 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும் என்றும் இ
து வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. Thanks for finally writing about >காலாண்டு விடுமுறையில் தொடர்ந்து 5 நாட்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட்
    பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை – Ippodhu <Loved it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here