“காலதாமதமாக கிடைக்கும் நீதி பயனற்றதாகிவிடும் ” – முக ஸ்டாலின்

0
270

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் ஒரு நீதிபதி தகுதி நீக்கத்தைச் செல்லும் என்றும் மற்றொரு நீதிபதி தகுதி நீக்கத்தைச் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர் . இந்த மாறுபட்ட தீர்ப்பால் 3வது நீதிபதியிடம் வழக்கு விசாரணைக்குச் செல்கிறது .

இந்த வழக்கைப் பற்றி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்

“ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here