சென்னையில் புதன்கிழமை (இன்று), காலை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் முறைகேடாக பணம் பெற்றதாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் முன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவினை மார்ச் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம் கைதைத் தொடர்ந்து மேலும் பல நடவடிக்கைகள் தொடரும் என்றார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்