கார்த்திக் நரேனின் நரகாசூரன் அப்டேட்

0
187

2016 இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு படம் தொழில்நுட்பரீதியிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் மணிரத்னம், கௌதம் என பலரை கவர்ந்தது. படத்தின் லாஜிக் மீறல்கள் மேக்கிங்கில் புதைந்து போயின. துருவங்கள் பதினாறை இயக்கியது 21 வயதான கார்த்திக் நரேன் என்ற இளைஞன் என்பது கூடுதல் ஆச்சரியம்.

கார்த்திக் நரேனின் இரண்டாவது படம் நரகாசூரனை கௌதம் தயாரித்துள்ளார். அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். த்ரில்லர்வகை படமான இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங்கும் முடிவடையும் நிலையில் உள்ளது. அரவிந்த்சாமிக்காக நாங்கள் காத்திருக்கிறேnம். அவர் டப்பிங் பேசினால் படத்தை சென்சாருக்கு அனுப்ப வேண்டியதுதான் என்றார் கார்த்திக் நரேன்.

இதையடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து மல்டி ஸ்டாரர் படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர் குறித்து அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றார்.

இதையும் படியுங்கள்: லோயா மரணத்திலுள்ள உண்மை வெளிப்படும்’: யஷ்வந்த் சின்கா

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்