கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார். டார்ஜிலிங்கில் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற உள்ளது. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்பட முக்கிய நடிகர்கள் சிலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, திரு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த பகத் இந்தப் படத்தில் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும், இருவருக்கும் இடையிலான நட்பு படத்தில் பிரதானமாக வருவதாகவும் உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

பகத் பாசிலின் வருகையால் படத்தின் பிரமாண்டம் இன்னும் அதிகரித்துள்ளது.

இதையும் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்