கார்த்திக் சுப்பாராஜ் படத்தை தயாரிக்கப் போவதில்லை – பிரபல நிறுவனம் முடிவு

0
222
Dhanush

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கப் போவதில்லை என்று தேனாண்டாள் ஸ்டுடியோஸ் முடிவு செய்துள்ளது.

இறைவி படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குவதாக இருந்தார். இறைவியின் தோல்வி காரணமாக படம் தள்ளிப் போனது. கார்த்திக் சுப்பாராஜ் பிரபுதேவாவை வைத்து மெர்குரி என்ற படத்தை இயக்கினார். தனுஷை வைத்து அவர் இயக்கும் படத்தை தயாரிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் முன்வந்தது.

தற்போது திடீரென்று கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படத்தை தயாரிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளனர். அதேசமயம், தனுஷ் நடிக்கும் படத்தை தனுஷே இயக்குவார் எனவும் அறிவித்துள்ளது.. கார்த்திக் சுப்பாராஜ் படத்தின் பட்ஜெட் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்து நிலவுகிறது.

இதையும் படியுங்கள்: ’டீ, ஸ்நாக்ஸ் செலவு 68.59 லட்சம் ரூபாய்’: சர்ச்சையில் சிக்கிய உத்தரகாண்ட் முதல்வர்

இதையும் படியுங்கள்: ஞாநி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்