காலா, 2.0 படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோரும் நடிக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன. தற்போது வந்திருக்கும் புதிய தகவல், மேகா ஆகாஷ் இந்தப் படத்தில் நடிக்கக்கூடும்.

மேகா ஆகாஷுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்