கார்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்.23ஆம் தேதி, நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், கந்து வட்டி கொடுமையின் காரணமாக தனது மனைவி சுப்புலெட்சுமி மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். இதில் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சென்னையை சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா என்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தைப் பார்ப்பது போல் சித்தரித்திருந்தார். இதனையடுத்து, நெல்லை ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

highcourt

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும் என கார்டூனிஸ்ட் பாலா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு புதன்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், மீதான விசாரணையின் முடிவில், கார்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்