இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் எவோக்(Range Rover Evoque) மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட்(DiscoverySport) எஸ்யூவி கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இன்ஜெனியம் பொருத்தப்பட்ட ரேஞ்ச்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்(DiscoverySport) எஸ்யூவியானது எஸ்இ மற்றும் எச்எஸ்இ ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளிலும் எவோக்(Range Rover Evoque) எஸ்யூவியில் எஸ்இ மற்றும் எச்எஸ்இ டைனமிக் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளும் கிடைக்கும்.

ஏற்கனவே, ரேஞ்ச்ரோவர் வெலர் (Range Rover Velar) எஸ்யூவி இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
செயல்திறன், குறைவான மாசு உமிழ்வு, அதிக மைலேஜ் என்று அனைத்து விதத்திலும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது.

இன்ஜெனியம் எஞ்சின் பொருத்தப்பட்ட வெலர் (Range Rover Velar) எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது ரேஞ்ச்ரோவர் எவோக்(Range Rover Evoque) மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் (DiscoverySport)ஆகிய இரண்டு மாடல்களிலும் புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 274 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த்தாகவும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இவற்றின் விலை :

ரேஞ்ச்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்(DiscoverySport) எஸ்யூவியானது ரூ.49.20/-
ரேஞ்ச்ரோவர் எவோக் (Range Rover Evoque) ரூ.51.06/-

DeCgSUOV4AAwh92

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்