கார்களின் விற்பனை வீழ்ச்சி

0
273

மாருதி சுசுகி கார்களின் விற்பனை, கடந்த மாதத்தில் 26 விழுக்காடு அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளன.

செப்டம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 22,640 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12,500.

கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் மாருதி சுசுகி கார்களின் விற்பனை 26.7 விழுக்காடு சரிவடைந்துள்ளது.

ஆல்டோ, வாகன் ஆர், எஸ்-பிரெஸ்ஸோ போன்ற சிறிய ரக கார்கள் விற்பனை 42.6 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளன.

புதிய வாகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், டிஸையர், பலேனோ கார்கள்  விற்பனை 22.7 விழுக்காடு அளவுக்கு குறைந்தன.

எர்டிகா, எக்ஸ்.எல்.6, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்.கிராஸ் கார்கள் விற்பனை சீராக உள்ளது. ஆம்னி, ஈகோ கார்கள் விற்பனை 32 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளன.

கடந்த மாதத்தில், 2046 இலகு ரக சரக்கு வாகனங்களை மாருதி சுசுகி விற்பனை செய்துள்ளது. செப்டம்பர் மாதத்தில், 26 விழுக்காடு சரிவைச் சந்தித்த போதிலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 34 விழுக்காடு அளவுக்கு சரிவைச் சந்தித்த மாருதி சுசுகிக்கு, செப்டம்பர் மாத கார் விற்பனை நிலவரம் சற்று எழுச்சியாகவே கருதப்படுகிறது.