காமென்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற சாய்னா நேவால்

0
252
Saina Nehwal

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார்.

நேற்று வரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் 8 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். மேலும் 5 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.

மகளிருக்கான பேட்மிண்டன் இறுதி போட்டிகள் நடைபெற்றதில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து மோதினர். இதில் 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த பி.வி. சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

இதையும் படியுங்கள்: உன்னாவ், கத்துவா பற்றிய கார்ட்டூன்கள் (தொகுப்பு)

இதையும் படியுங்கள்: ’உன்னைப் பாதுகாக்க முடியவில்லை… மன்னித்துவிடு அசிஃபா’

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்