காமென்வெல்த் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மேரி கோம்

0
200
Mary Kom

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றார்.

காமென்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையையும் வரலாற்றையும், மேரி கோம் பெற்றார்.

மகளிருக்கான குத்துச்சண்டையில் 45 முதல் 48 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் வீராங்கனையான மேரி கோமை எதிர்த்து வடக்கு அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்டினா ஓ ஹாரா களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் கிறிஸ்டினாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை முதன்முறையாகக் கைப்பற்றினார் மேரி கோம்.

இதையும் படியுங்கள்: கர்நாடக தேர்தல்: வெல்வது யார்?; மாறும் கருத்துக் கணிப்பு முடிவுகள்; முந்துகிறதா பாஜக?

இதையும் படியுங்கள்: உன்னாவ், கத்துவா பற்றிய கார்ட்டூன்கள் (தொகுப்பு)

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்