ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 4ஆம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை (இன்று) ஆடவருக்கான 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில், தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

satheesh1

2010ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் சதீஷ்குமார், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியா ஐந்து பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு, சஞ்சிதா சானு ஆகியோர்கள் பெண்கள் பளு தூக்கும் பிரிவில் தங்கப் பதக்கங்களும், ஆடவர் பளுதூக்கும் பிரிவில் தீபக் லேதர் வெண்கலம் மற்றும் குருராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்