திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ்

தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவெல் ஆஃப் மெல்போர்னில் போட்டிப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய மூன்று பிரிவுகளில் சூப்பர் டீலக்ஸ் போட்டியிடுகிறது. பதாய் ஹேh, அந்தாதுன், கல்லி பாய் போன்ற இந்திப் படங்களும் போட்டியில் உள்ளன.

காப்பான் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சாயிஷா உள்பட பலர் நடித்திருக்கும் படம் காப்பான். லைகா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பாட்டை போட்டமா யூடியூபில் வெளியிட்டோமா என்றிருக்கும் இன்றைய காலகட்டத்தில் காப்பான் பாடல்கள் வெளியீட்டு விழாவை வரும் 21 ஆம் தேதி விமரிசையாக கொண்டாடுகிறார்கள். ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

நானியின் ஜெர்ஸி ரீமேக்கில் விஷ்ணு விஷால்

இந்த வருடம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நானியின் ஜெர்ஸி. கிhpக்கெட்டை மையப்படுத்திய இந்த ஃபீல்குட் படத்தின் இந்தி ரீமேக்கை கரண் ஜோஹர் வாங்கியுள்ளார். ஷாகித் கபூர் அனேகமாக இந்தியில் நடிக்கலாம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்கலாம் என்கின்றன செய்திகள். விஷ்ணு விஷால் அடிப்படையில் ஒரு கிரிக்கெட் ப்ளேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேயால் இணைந்த அஜ்மல், பரத்

திறமையும் அழகும் இருந்தும் பரத்தால் ஜெnலிக்க முடியவில்லை. ஆனால் தமிழில் காளிதாஸ், 8, நடுவன் என பல படங்கள் கைவசம் உள்ளன. அதேபோல் கன்னடத்தில் அகில் என்ற படம். மலையாளத்தில் 6 ஹவர்ஸ். இது தவிர புதிய மலையாளப் படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். இதில் அஜ்மல், பரத், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடிக்கின்றனர். இதுவொரு பேய் படம். சுரேஷ் உன்னித்தான் படத்தை இயக்குகிறார். படத்தில் நடிப்பவர்கள் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதால் படம் தமிழிலும் வெளியாக வாய்ப்புள்ளது.

சல்மான் படத்தில் இணைந்த சுதீப்

கன்னடத்தில் முன்னணி நாயகன் சுதீப். அவரது பயில்வான் திரைப்படம் கன்னடம் மட்டுமின்றி இந்தி உள்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது. அவ்வப்போது இந்திப் படங்களில் வில்லனாகவும் சுதீப் நடிக்கிறார். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்துவரும் தபாங் 3 படத்தில் முதல்முறையாக சல்மானுடன் சுதீப் நடிக்கிறார். இது வில்லன் வேடமாக இருக்கலாம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here