காதல் என்பது அதிகாரம் அல்ல

காதல் என்பது அதிகாரம் அல்ல

0
672
காதல் என்பது அதிகாரம் அல்ல

காதல் என்பது அதிகாரம் அல்ல; காதல் என்பது ஆதிக்கமும் அல்ல; காதல் என்பதை ஆணின் அதிகாரமாக புரிந்துகொண்ட அழகேசன் அந்த அதிகாரம் பறி போகும் என்கிற அச்சத்தில் அஸ்வினியைப் படுகொலை செய்தார். அஸ்வினி படிக்கும் கல்லூரியின் வாசலிலேயே இந்தப் படுகொலையை நடத்தி தனது அதிகாரத்தை நிலைநாட்டியுள்ளார்; தனது அதிகாரத்தை நிலைநிறுத்தி விட்டு இனி தனக்கு என்ன நடந்தாலும் சரிதான் என்று நின்றவர் மக்களின் அறம் சார்ந்த கோபத்துக்குள்ளாகியிருக்கிறார். பின்னர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதிக்கம் புகட்டப்பட்ட உடலைக் கொண்ட அழகேசனால் “இல்லை என்பதும் உண்மையே” என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; பல வளர்ந்த நாடுகளில் இதுபோன்று பெண்களை வலுக்கட்டாயமாக பின் தொடர்கிறவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. பிடிவாதமாக பின் தொடரும் வன்முறை, ஆதிக்க மனோபாவத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பு மன நல ஆலோசகர்களும் சில நாடுகளில் இருக்கிறார்கள். அஸ்வினிக்கு இப்படி பாரதூரமான விளைவுகள் ஏற்படலாம் என்பதைக் காவல் துறை இந்த வழக்கில் அனுமானிக்க தவறியிருக்கிறது.

சக ஆண்களிடம் “காதல் என்பது அதிகாரம் அல்ல” என்று சொல்வதை இந்தக் கணம் முதல் முக்கியக் கடமையாக முன்னெடுப்போம்.

இல்லை என்பதும் உண்மையே

இல்லை என்பதும் உண்மையே

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்