பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காதலர்தின கொண்டாட்டங்களுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காதலர் தினம் என்பது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென அப்துல் வாஜித் என்பவர் பொதுநல மனு ஒன்றை, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில் சமூக ஊடகங்களில் காதலர் தினம் பற்றிய தகவல்கள், காதலை மேன்மையாக கூறும் பதிவுகள் ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திருந்தார்.

இதையும் படியுங்கள் : பாகிஸ்தானில் காதலர்தினத்துக்கு எதிர்ப்பு

இதனை, திங்கட்கிழமையன்று விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், பாகிஸ்தானில் பொது இடங்களில் காதலர் தினம் தொடர்பான கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் இயங்கும் அனைத்து விதமான ஊடங்களும் காதல் தினம் தொடர்பான எந்த விஷயங்களையும் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்