19 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) காணாமல் போனது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க தனது அலுவலகத்தைப் பயன்படுத்துவேன் என்று சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி செவ்வாய்க்கிழமை கர்நாடக சட்டசபையில் தெரிவித்தார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த சிறப்பு விவாதத்தின் போது, காங்கிரஸின் மூத்த உறுப்பினர் எச்.கே.பாட்டீல், ஆர்டிஐ பதில்களின் அடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போனது குறித்த புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய பின்னர், காகேரி இவ்வாறு கூறினார்.
காணாமல் போன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி அறிந்தால் அதிர்ச்சியடைவீர்கள். 9,64,270 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 9,29,992 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவற்றை த்ரிம்ப பெறமுடியவில்லை என்றும் BEL மற்றும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் தகவல் அறியும் உரிமை (RTI) ஆர்வலர்களுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளது . கிட்டத்தட்ட 19 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காணவில்லை, அவை எங்கு சென்றன என்பது யாருக்கும் தெரியாது! இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் இயக்க முடியுமா? அது குறித்து எதுவுமே கேட்காமல் எப்படி இருக்கிறீர்கள்? என்று பாட்டீல் கேள்வி எழுப்பினார்.
2014 ஆம் ஆண்டில், 62,183 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கியதாக BEL கூறியதாகவும் பாட்டீல் கூறினார். “ஆனால், தேர்தல் ஆணையம் ஒன்று கூட பெறவில்லை,” என்றும் அவர் கூறினார்
முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார், இது ஒரு பெரிய மோசடி என்று கூறியதோடு, இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகளை சட்டசபைக்கு வரவழைக்குமாறு சபாநாயகரை வலியுறுத்தினார். “செய்யப்பட்ட ஆர்டருக்கும் சப்ளைக்கும் இடையில் ஏதேனும் மாறுபாடு இருந்தால், உங்களுக்கு மேலும் ஆதாரம் தேவையா? தேர்தல் ஆணையம், தன்னாட்சி அமைப்பாக இருப்பதால், அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது,” என்றார்
சபாநாயகர் காகேரி, பாட்டீலிடம் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் எனது அதிகார வரம்பு மற்றும் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில்களையும் தீர்வுகளையும் வழங்க முயற்சிப்பேன் என்றார்.
பாட்டீல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்தும் கவலை தெரிவித்தார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதிக்க அரசியல் கட்சிகளை மட்டுமல்ல, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளையும் தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார். இதற்கு பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் கூறுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்ய டெல்லியில் தேர்தல் ஆணையம் நடத்திய சவாலை எந்த கட்சியும் ஏற்கவில்லை. காங்கிரஸ் தனித்து விடப்பட்டது .
முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, பதவியில் இருந்தபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதிக்க பெங்களூரில் எத்திக்கல் ஹேக்கத்தான் நடத்த முன்வந்ததாகக் கூறினார். ஹேக்கத்தானை அரசாங்கம் நடத்தும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதியுள்ளேன். அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையேட்டினை பதிலாக தந்தனர் என்று கார்கே கூறினார்.
விவாதத்தின் போது, பாட்டீல் மற்றும் குமார் இருவரும் தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாததைக் கூறினார்கள் . மொத்த தேர்தல் பத்திரங்களில் 75 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது. நன்கொடையாளர்களின் அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளிப்படைத் தன்மையின்மை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்று இந்தச் சபையில் நாம் தீர்மானம் எடுக்க வேண்டும். ஊழலை அதிகாரப்பூர்வமாக்குவதும் நிறுவனமயமாக்குவதும் மிகவும் தீவிரமான கவலையாக உள்ளது என்றும் பாட்டீல் கூறினார்