காணமல் போன முகிலன் ; விசாரணை விவரத்தை அளிக்க ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உத்தரவு

0
126

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல்போன விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை அளிக்க மத்திய அரசுக்கு ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் ரெ.முகிலன் (52). சூழலியல் செயல்பாட்டாளரான இவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்தி துப்பாக்கிச் சூடு குறித்த சில தகவல்களை சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.  

அதில் கடந்த ஆண்டு ஏப்ரலில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறையில் பொதுமக்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பது தொடர்பான ஆதாரங்களை வெளி யிட்டார். பின்னர் பேசிய அவர் இந்த ஆதாரங்களை வெளியிடு வதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுதான் முகிலன் வெளியிட்ட வீடியோ

மறுநாள் எழும்பூரில் இருந்து மதுரைக்கு ரயிலில் சென்ற அவர், இரவு 10.30 மணிக்கு நண்பர்களுடன் ஃபோனில் பேசி இருக்கிறார். அதன்பின் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பாதி வழியில் மாயமானதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் எழும்பூர் ரயில்வே காவல் நிலையததில் புகார் கொடுக்கப்பட்டது.

முகிலன் கடத்தப்பட்டிருக்கலாம், ஸ்டெர்லைட் ஆதரவாளர்களோ, போலீஸாரோ அவரை ரகசிய இடத்தில் கடத்தி வைத்திருக்கலாம் என அந்த புகார் மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதில், ‘மனித உரிமை விதிமீறல்கள் நடக்காமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. முகிலன் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை விவரங் களை கவுன்சிலிடம் அளிக்க வேண்டும்.

முகிலன் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? அவ்வாறு விசாரணை நடத்தப் பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை அளிக்க வேண்டும். விசாரணை நடத்தப்படாமல் இருந்தால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.

இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுச்சூழல் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியான முறையில் பணியாற்றுவதை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விளக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here