காட்பாடியில் முறைகேடாக அரசு நிலம் விற்பனை: ரூ.15 கோடி இழப்பு

ஊழலால் அரசுக்கு ரூ.15 கோடி நஷ்டம்

0
280
தனியாருக்கு 15 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் வழங்க கூட்டுறவுச் சங்க நிலம் ஏன் விற்கப்பட்டது?

வட ஆற்காடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் தச்சு மற்றும் கருமார் கூட்டுறவு சங்கத்திற்கு காட்பாடியில் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது; ரூ.23 கோடி பெறுமானமுள்ள இந்த நிலத்தை கே.வாசு என்பவருக்கு ரூ.9 கோடிக்கு விற்றிருக்கிறார்கள். இந்த நிலம் விற்கப்படுவதற்கு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அனுமதியை முறைப்படி பெற்றிருக்க வேண்டும். ஆனால் கதர் வாரியத்தின் துணை இயக்குநர் ச.ரவியின் வாய்மொழி உத்தரவின் பேரில் இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டதாக ஊழலை ஒழிக்க முயற்சிக்கும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தப் பிரச்சினையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ளும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

“இந்த முறைகேட்டில் ஈடுபட்ட கதர் வாரிய அலுவலர்கள் ச.ரவி, என்.நாகராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செந்தில் ஆறுமுகம் தமிழக அரசின் கதர்த் துறை செயலாளருக்குக் கோரிக்கை வைத்துள்ளார். அரசின் அனுமதியும் பெறாமல் இழப்பை உண்டாக்கும் வகையில் நிலம் விற்கப்பட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் திரட்டியிருக்கிறது; இந்தத் தகவல்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. இந்த முறைகேட்டில் தமிழக அரசின் ஊழல் தடுப்புத் துறை விசாரணையைத் தொடங்கி விட்டது என்று உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்