லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நடித்த காஞ்சனா 3 தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இரு மொழிகளிலும் இணைந்து 100 கோடியை தாண்டியிருக்கும் இந்தப் படம் தெலுங்கு மாநிலங்களில் அனைத்துத் தரப்பினரின் பாக்கெட்டையும் நிரப்பியுள்ளது.

காஞ்சனா 3 படத்தை தமிழில் சன் பிக்சர்ஸும், ஆந்திரா, தெலுங்கானாவில் தாகூர் மதுவும் வெளியிட்டனர். தெலுங்கு மாநிலங்களிலிருந்து தாகூர் மதுவுக்கு பத்து கோடிகள் லாபம் கிடைத்துள்ளது. கடந்த சில வருடங்களில் மதுவுக்கு கிடைத்த பெத்த லாபம் இது என்கிறார்கள். 

சன் பிக்சர்ஸுக்கு கிடைத்த லாபம்? நிச்சயம் இதைவிட அதிகமாக இருக்கும். படத்தை திரையரங்குகளுக்கு அதிக பணத்துக்கு விற்றதால் வருமானமும் சன் பிக்சர்ஸுக்கு அதிகமாகத்தானே இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here