தமிழின் முதல் வெற்றிகரமான சீரிஸ் என முனியை சொல்லலாம். முனி, முனி 2 காஞ்சனா, காஞ்சனா 2 என மூன்று படங்கள் வந்துள்ளன. மூன்றும் பேய் கதைகள். லாரன்ஸ் தொடர்ச்சியாக நடித்து வருகிறார், இயக்கவும் செய்கிறார். இந்த ஒற்றுமை தவிர்த்து கதாபாத்திரத்தில், கதையில் இந்த மூன்று படங்களுக்குள் ஒற்றுமையோ, தொடர்ச்சியோ இல்லை.

2015 ஏப்ரலில் வெளியான காஞ்சனா 2 மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தன்னுடன் வெளியான ஓ காதல் கண்மணி படத்தை காஞ்சனா 2 வசூலில் தாண்டியது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் மொத்தமாக 100 கோடிகளை கடந்து வசூலித்தது. லாரன்சின் பழைய தோல்விகளை காஞ்சனா 2 மறக்கடித்தது.

காஞ்சனா 2 க்குப் பிறகு லாரன்ஸ் நடித்த, இயக்கிய படங்கள் வெற்றிபெறவில்லை. காஞ்சனா 2 வைப்போல காஞ்சனா 3 தனது கரியரை புதுப்பிக்கும் என நம்புகிறார். காஞ்சனா 3 இல் பிக்பாஸ் பிரபலம் ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். 2019 ஏப்ரலில் படத்தை வெளியிட லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். கோடைவிடுமுறையில் குடும்பமாக காஞ்சனா பேயை காண வருவார்கள் என்ற நம்பிக்கை.

ஸ்டார் மீதான நம்பிக்கையைவிட பேய் மீதான நம்பிக்கை நல்லது. ஒரேயடியாக கைவிடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here