காஞ்சனா 3 ஏப்ரல் 19 வெளியாகிறது. காஞ்சனா சீரிஸில் குறைந்தது 10 பாகங்களாவது எடுப்பேன் என லாரன்ஸ் சூளுரைத்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

2007 இல் இயக்குநர் சரண் தயாரிப்பில் முனி படத்தை இயக்கி நடித்தார் லாரன்ஸ். லாரன்சுடன் அதில் ராஜ்கிரண் நடித்திருந்தார். படம் ஹிட். அதனைத் தொடர்ந்து முனி படத்தின் இரண்டாவது பாகமாக காஞ்சனாவை இயக்கினார். சரத்குமார் அதில் திருநங்கையாக நடித்தார். அதில்தான் காமெடி ஹாரர் என்ற கலப்புத் திருமணத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார் லாரன்ஸ். அதையடுத்து காஞ்சனா 2 (முனி 3). வரும் 19 ஆம் தேதி காஞ்சனா 3 வெளியாகிறது. லாரன்சுடன் வேதிகா, ஓவியா நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கில் தயாரித்து, இயக்கி நடித்துள்ள லாரன்சின் இந்தப் படத்தை தமிழில் சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தாகூர் மது வெளியிடுகிறார். காஞ்சனா சீரிஸ் குறித்து பேசியவர், குறைந்தது பத்து பாகங்களாவது எடுக்க வேண்டும் என லாரன்ஸ் அவரிடம் கூறியதாக தெரிவித்தார்.

இரண்டுக்கே திகட்டிவிட்டது. அதேமாவை இன்னும் எத்தனைமுறைதான் புளிக்க புளிக்க ஊத்துவீங்க டான்ஸ் மாஸ்டர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here