காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெறும்: சித்தராமையா

0
559

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு
எண்ணிக்கை மே15ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா
தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில்
தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாகவும் மஜத (மதசார்பற்ற ஜனதா தளம் ) உடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும் என்றும் க‌ருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன .

இதுகுறித்து க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தபோது கூறியதாவது –
இந்த தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் . காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போவதால், தொங்கு சட்டப்பேரவை என்கிற பேச்சுக்கே இடமில்லை கர்நாடகாவில் எனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி சிறப்பாக நடந்துள்ளது. கடந்த தேர்தலின்போது அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நாங்கள்
நிறைவேற்றியுள்ளோம். எனவே தேர்தலுக்கு பிறகு மஜத உடன் இணைந்தோ அல்லது பிற கட்சிகளின் ஆதரவுடனோ ஆட்சி அமைக்கும் அவசியம் ஏற்படாது..

தேர்தலுக்கு பிற்கு மஜத தேசிய தலைவர் தேவகவுடாவுடன் கூட்டணி வைக்கவே பிரதமர் மோடி அவரை புகழ்கிறார். மோடியின் புகழ்ச்சியால் எந்தப் பலனும் கிடைக்காது. தேர்தலுக்காக நடக்கும் இந்த நாடகத்தை கர்நாடகா மக்கள் நம்ப மாட்டார்கள்.

என்னை இரு தொகுதிகளிலும் தோற்கடிக்க பாஜக, மஜத ரகசிய கூட்டணி அமைத்துள்ளன. அதையெல்லாம் மீறி நான் இரு தொகுதிகளிலும் வெல்வேன். மோடி கர்நாடகாவுக்கு எதையும் செய்யவில்லை. இரு வறட்சி காலங்களிலும் கூடுதல் நிதி ஒதுக்குமாறு மோடியிடம் கேட்டேன். மோடி கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. அவரை சந்திக்க பலமுறை நேரம் கேட்ட போதும், என்னை சந்திக்க அனுமதிக்கவில்லை. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் சந்தித்து முறையிட்டபோது கூட, மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையும் படியுங்கள்: தலித் மக்கள் மீதான வன்முறையினைக் கண்டிக்காமல் மோடி வேடிக்கைப் பார்த்தார்” – ராகுல்காந்தி

இதையும் படியுங்கள்: “பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்