காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமானமாக வருடத்திற்கு ரூ72,000 கொடுக்கப்படும் – ராகுல் காந்தி அறிவிப்பு

0
133

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருமானத்தை உத்தரவாதம் செய்யும் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் எங்களை ஆட்சியில் அமர்த்தினால், நாட்டில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் உத்தரவாதத்தை காங்கிரஸ் அளிக்கும். இது வறுமை, பசியை ஒழிக்கும். இது எங்களுடைய திட்டம், எங்களுடைய வாக்குறுதி என்று ஜனவரி 28, 2019 அன்று அறிவித்திருந்தார்.  

 இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  வறுமைக் கோட்டில் வாழும் 25 கோடி ஏழை மக்களுக்கு வருடந்தோறும் ரூ72000 அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் .

இது ஒரு மிக சக்திவாய்ந்த சிந்தனை . இந்த திட்டத்திற்காக  பல பொருளாதார நிபுணர்களை நாங்கள் கலந்தாலோசித்து வருகிறோம். நாங்கள் வறுமையை ஒழிப்போம் என்றார். 

நியூதம் அய் யோஜனா’ திட்டத்துக்குக் கீழ், குறைந்தபட்ச நிதியுதவியானது, நேரடியாக ஏழை குடும்பங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேற்றப்படுவர். 

இந்தத் திட்டம் சாத்தியமானதுதான். இது குறித்து நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாக ஆய்வு செய்து வருகிறோம். நாங்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தைக் கொடுப்போம் என்றோம். அதைச் செய்தோம். அதைப் போலவே இந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவோம்’ என்று உறுதியளித்தார். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here