கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது அக்கட்சியினரே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதனையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. அதில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா, சிகாரிபூரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதனைத்தொடர்ந்து இரண்டாது பட்டியலையும் பாஜக இன்று (ஏப்.16) வெளியிட்டுள்ளது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 219 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரின் சாமுண்டிஸ்வரி தொகுதியிலும், அவரது மகன் யதீந்தரா, வருணா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சீட் கிடைக்காத ஆத்திரத்தில், அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்களின் ஆதரவாளர்கள், பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையும் படியுங்கள்: திருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்