வாரிசு அரசியல் பாஜகவில் அதிகம் ; 2014ஆம் ஆண்டு மக்களவைக்குத் தேர்வான வாரிசு அரசியல்வாதிகளில் 44.4 சதவீதம் பேர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு பேசும் பிரதமர் மோடி காங்கிரஸ் குடும்ப அரசியல் நடத்தி வருகிறது என்கிறார். குடும்ப அரசியல் சமுதாயத்துக்கு நல்லதல்ல என்றும் மோடி கூறுகிறார்.

பாஜக மட்டுமே ஜனநாயகயத்தை நிலை நாட்டும் என்றும் மற்ற அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலை நடத்தி வருகிறது என்றும் கூறுகிறார்.

மோடி வாரிசு அரசியலைக் குறித்து ஒருமுறை மட்டும் பேசவில்லை.பல முறை பேசியிருக்கிறார். ஆனால் பாஜகவிலேயே பலரது வாரிசுகளே தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகவும், எம்பியும் ஆக இருக்கிறார்கள என்பதை அவர் மறந்துவிட்டார். பாஜகவில் வாரிசு அரசியல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை அவர்கள் வெளி உலகிற்கு சொல்வதில்லை.

ஹாங்ஹாங் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோமெய்ன் கார்லெவென் வெளியிட்ட கட்டுரையில் 22 சதவீதம் வாரிசு அரசியல்வாதிகள் தற்போதுள்ள மக்களவையில் இருக்கிறார்கள். 15 வது முறையாக தேர்தெடுக்கப்பட்ட மக்களவையில் இருந்த வாரிசு அரசியல்வாதிகளில் 30 சதவீதம் 16 வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையிலும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் . 2014 இல் அமைந்த மோடி அரசில் வாரிசு அரசியல்வாதிகள் 44.4 சதவீதம் இருக்கிறார்கள். நரேந்திர மோடி தன்னுடைய கட்சியிலேயே வாரிசு அரசியலை வைத்து விட்டு மற்றவர்களின் கட்சியில் இருக்கும் வாரிசு அரசியலைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

வாரிசு அரசியலை பற்றி பாஜக வெற்றிகரமாக மறைத்து வருகிறது என்று கூறலாம். பொது இடங்களில் பேசும் போது பாஜகவில் யார் அடிமட்டத்திலிருந்து அரசியலுக்கு வந்தார்களோ அவர்களை பற்றி மட்டுமே பாஜக பேசி வருகிறது. பாஜகவில் பல மூத்த தலைவர்களின் வாரிசுகளே அதிகம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் வாரிசுகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தினால் வாரிசுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் .

பாஜகவில் இருக்கும் பலர் பாஜக தலைவர்களின் வாரிசுகள். அந்த வாரிசுகள் தங்கள் பதவிகளை அனுபவிக்கும்போது அதனை பாஜக கட்சி கண்டுகொள்ளாமல் மற்றவர்களை குறை கூறி வருகிறது

பாஜக எப்போதும் காங்கிரஸ் கட்சியை வாரிசுகளின் கட்சி என்று பேசி வருகிறது. பாஜக மாநிலங்களில் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கும்போது அக்கட்சிகள் வாரிசு அரசியலில் இருந்தால் பாஜக அது பற்றி கவலைபடுவதேஇல்லை .

காங்கிரஸ் அல்லாமல் மாநிலங்களில் சந்திர சேகர் ராவ் டிஆர் எஸ் கட்சி , சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி , திமுக, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், மக்கள் ஜனநாயக கட்சி, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், நேஷ்னல் லோக் தளம் போன்றவைகளில் குடும்ப அரசியல் இருக்கிறது .

பாஜகவில் வாரிசு அரசியல் இதுதான்

* மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த வேத பிரகாஷ் கோயல் அவர்களின் மகன் .

* மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்த கங்காதர்பந்த் பட்னாவிஸ் அவர்களின் மகன். இவரது அத்தை ஷோபா பட்னாவிஸ் மகாராஷ்டிரா சட்டசபையில் அமைச்சராக இருந்தவர்.

* மறைந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே பால்வே மகாராஷ்டிரா சட்டசபையில் அமைச்சர் .

*கோபிநாத் முண்டேவின் மற்றொரு மகள் அவர் இறப்புக்குபின் அவர் தொகுதியில் நின்று எம்பி ஆகியுள்ளார்.

*பூனம் மகாஜன்,மும்பை எம்பி பிரமோத் மகாஜன் அவர்களின் மகள் . (பிரமோத் மகாஜனின் சகோதரி பிரட்னயா, கோபிநாத் முண்டே அவர்களின் மனைவி).

*பாஜக தலைவர் ஏக்நாத் கட்சே -வின் மருமகள் ரக்ஷா மகாராஷ்டிராவின் ரேவர் தொகுதி எம்பி

*மேனகா காந்தி உத்தர பிரதேசம் பில்பித் தொகுதி எம்பி, அவரின் மகன் உத்தர பிரதேசம் சுல்தான்புர் தொகுதி எம்பி .

*முன்னாள் உத்தரபிரதேச முதல்வர் மற்றும் ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் உத்தர பிரதேசம் இதா தொகுதி எம்பி

*டெல்லி முன்னாள் முதல்வர் சஹிப் சிங் வர்மா-வின் மகன் பர்வேஷ் டெல்லியில் எம்பி

* ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் உத்தர பிரதேச பாஜக செயலாளர்

*பீகார் முன்னாள் கவர்னர், மூத்த பாஜக தலைவர் லால்ஜி தண்டன் அவர்களின் மகன் அஷ்தோஷ் கிழக்கு லக்னோ தொகுதி எம் எல் ஏ.

*பாஜக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களின் மைத்துனர் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா

*அரசியல்வாதி மகந்த் அவைத்யநாத்தின் வாரிசுதான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

*உத்தர பிரதேச பாஜக தலைவர் ரமாபதி ராம் திரிபாதியின் மகன் ஷரத் திரிபாதி, சந்த் கபிர் நகர் தொகுதி எம்பி

*ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் எம்பி. வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே சிந்தியா மத்திய பிரதேசத்தில் தொழில் அமைச்சர் .

*டெல்லி சட்டமன்றத்தின் சபாநாயகர் சர்தி லால் கோயல் அவர்களின் மகன் ராஜஸ்தான் அமைச்சர் விஜய் கோயல் .

*சுஷ்மா சுவராஜின் சகோதரி வந்தனா ஷர்மா ஹரியானா ஷஃபிடோன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

*சுஷ்மா சுவராஜின் கணவர் சுவராஜ் கௌஷால் மிசோரத்தில் 1990 – 1993 ஆண்டுகளில் கவர்னராக பதவி வகித்தார்.

*மத்திய பிரதேச அமைச்சர் சுரேந்திரா பத்வா முன்னாள் அமைச்சர் சுந்திரேயல் பத்வாவின் மருமகன் .

* பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியாவின் மகன் ஆகாஷ் – ஐ வேட்பாளராக பாஜக இந்தூரில் நிறுத்தியபோது பாஜகவில் வாரிசு அரசியல் மேலோங்கி நிற்கிறது என்று பாஜக எம் எல் ஏ உஷா தாக்கூர் கூறியுள்ளார்.

*முன்னாள் பிரதமர் வாஜ்வாயியின் மருமகன் அனூப் மிஸ்ரா , மத்திய பிரதேசம் மொரீனா தொகுதியின் எம்பி .

*ஹிமாச்சல் பிரதேசம் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால் அவர்களின் மகன் அனுராக் தாக்கூர் ஹமிர்பூர் எம்பி .

*மத்திய பிரதேசம், ஜபல்பூர் முன்னாள் எம்பி ஜெயஶ்ரீ பானர்ஜியின் மருமகன்தான் தற்போதைய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே பி நட்டா.

*பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சின் பாபஹோர் பாஜகவில் போட்டியிட்ட சுமன் பாய் பாப்ஹோர் அவர்களின் மகன் .

*குஜராத்தில் கம்பாலியா தொகுதி எம் எல் ஏ கேமத்பாய் மாடம் – மின் மகள் பூனம்பென் மாடம் குஜராத் ஜாம்நகர் தொகுதி எம்பி

*முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வின் மகன் ஜெயந்த் சின்ஹா ஜார்க்கண்ட் ஹசரிபாக் தொகுதியின் எம்பி

*சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங் -கின் மகன் அபிஷேக் ராஜ்நாண்ட்கோன் தொகுதியின் எம்பி

*அருணாச்ச்சல பிரதேசத்தைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ- வின் அப்பா ரின்சின் காருவாஸ் காங்கிரஸ் எம் எல் ஏ

*நிர்மலா சீதாராமனின் மாமியார் ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் எம் எல் ஏ. மாமனார் பரகலா சேஸவதாரம் ஆந்திர சட்டசபையில் 1970 களில் அமைச்சராக இருந்தவர் .

தி பிரின்ட் ஊடகம் அரசியலில் வாரிசுகள் பற்றி இரு ஆய்வு செய்திருக்கிறது. அதில் பாஜகவுக்கு மக்களவையில் இருக்கும் 281 உறுப்பினர்களில் 38 பேர் வாரிசுகள். ராஜ்ய சபாவில் இருக்கும் 56 பாஜக எம்பிக்களில் 9 பேர் வாரிசுகள்.

1

2009 – 2014 காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்களவையில் 211 உறுப்பினர்களில் 58 பேர் வாரிசுகள். ராஜ்யசபாவில் 9 எம்பிக்கள் வாரிசுகளாக இருந்தனர்.

வாரிசுகளாக இருக்கும் 38 பாஜக எம்பிக்களின் அப்பாக்கள் மாநிலத்தின் முதல்வராகவோ அல்லது துணை முதல்வராகவோ இருந்திருக்கிறார்கள். சட்டீஸ்கர் முதல்வரின் மகன் , ராஜஸ்தான் முதல்வரின் மகன் , உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மகன் அரசியலில் பதவியில்தான் இருக்கிறார்கள் .

உத்தரபிரதேசத்தில்தான் வாரிசு அரசியல் அதிகமாக இருக்கிறது. 71 பாஜக எம்பிக்களில் 12 பேர் வாரிசுகள். பீகாரில் 22 பாஜக எம்பிக்களில் 5 பேர், மகாராஷ்டிராவில் 23 பாஜக எம்பிக்களில் 4 பேர் வாரிசுகள்.

மகாராஷ்டிராவில் பிர்தம் முண்டே, பூனம் மகாஜன், ஹீனா கவித் ஆகியோர் பெரிய பாஜக தலைவர்களின் மகள்கள். மேலும் மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் எக்நாத் கட்சேயின் மருமகள் ரக்ஷா கட்சேயும் அரசியலில் இருக்கிறார். குஜராத்தில் 3 , ராஜஸ்தானில் 3 பேரின் வாரிசுகள் அரசியலில் இருக்கிறார்கள். சட்டீஸ்கரில் 2 வாரிசுகள் அரசியலில் இருக்கிறார்கள். மத்திய பிரதேசம் , ஆந்திர பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, ஜார்க்கண், டெல்லி, உத்தரகாண்ட், ஹரியானாவில் மாநிலங்களுக்கு 1 வாரிசு அரசியலில் இருக்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் , 75 அமைச்சர்களில் 15 பேர் அரசியல்வாதிகளின் வாரிசுதான். அதாவது 20 சதவீதம்.

( இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )