காங்கிரசின் நடவடிக்கைகளால் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை ஓரங்கட்டும் முயற்சியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இரு தலைவர்களும் டெல்லியில் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச அரசியலில் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர் துருவங்களாக இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்காததே அதிருப்திக்குக் காரணம் .

இதுகுறித்து பேசிய அகிலேஷ் யாதவ், ”எங்கள் கட்சி எம்.எல்.ஏ.-க்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கவில்லை. காங்கிரசுக்கு நன்றி” என்று கூறியிருந்தார்.

அடுத்த வாரமும் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரின் சந்திப்பு இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உத்தரப்பிரதேச அரசியலில் மட்டும் அல்லாமல் தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின்போது பாஜக கூட்டணி உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80-ல் 73 தொகுதிகளை கைப்பற்றியது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தலில் அக்கட்சி மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவிடம் 2 தொகுதிகளை இழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here