காஃபியுடன் சுவைக்க ஓர் அருமையான கேக். மிகவும் மிருதுவாக இருக்கும்; அதே நேரம் ஹெவியாக இருக்காது. காலையிலும் மாலையிலும் காபிஃயுடன் எடுத்துக்கொள்ள மிக அருமையாக இருக்கும்.

காஃபி கேக் என்றவுடன் இதில் காஃபி பவுடர் கலந்து செய்திருப்பதாக நினைக்க வேண்டாம்; புது வருட தினத்தன்று இதைச் செய்தேன். எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள்; நண்பர்களுக்கும் எடுத்துக்கொண்டு போனார்கள்.

கேக்கின் மேலே பிரவுன் சுகர் கலந்த வால்நட் தூவி இருப்பேன்; பார்த்தவுடன் சாப்பிடும் ஆவலைத் தூண்டும். லேசான இனிப்புடன் உள்ள இந்தக் கேக்கைச் செய்து பகிர்ந்து சுவைக்கவும்.

தேவையான பொருட்கள்


காஃபி கேக்கின் மேலே போடுவதற்கு

1/2 கிண்ணம் -பொடிதாக நறுக்கிய, வறுத்த வால்நட்

1/4 கிண்ணம் -மைதா

3 மேசைக் கரண்டி பிரவுன் சுகர்

3 மேசைக் கரண்டி சீனி

1/2 தேக்கரண்டி பட்டை பொடி

1/4 தேக்கரண்டி உப்பு

3 மேசைக்கரண்டி உருக்கிய வெண்ணெய்


காஃபி கேக் கலவை

1 1/2 கிண்ணம் மைதா மாவு

1/2 கிண்ணம் பிரவுன் சுகர்

1/4 கிண்ணம் சீனி

1 தேக்கரண்டி பேகிங் பவுடர்

1/2 தேக்கரண்டி சமையல் சோடா

1/2 தேக்கரண்டி பட்டை பொடி

1/2 தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி

1/2 தேக்கரண்டி உப்பு

3/4 கிண்ணம் தயிர் போல் கட்டியாக இல்லாமல், மோர் போல் தண்ணீராகவும் இருக்காத வஸ்து

1 1/2 முட்டை

1/2 கிண்ணம் வெஜிடபிள் எண்ணெய்

செய்முறை

கேக் செய்வதற்கு முன் ஓவனை 190 டிகிரியில் சூடு பண்ண வேண்டும் .

கேக்கின் மேலே போடுவதற்கான செய்முறை

முதலில் வால்நட்டினை கருகாமல் வறுத்து எடுக்கவும். அதன் பின் கேக்கின் மேலே போடுவதற்கான பொருட்களில் சொன்னவை எல்லாவற்றையும் போட்டு வால்நட்டுடன் கலந்து கொள்ளவும். இது உதிர் உதிராக இருக்கும்.

கேக் கலவைக்கான செய்முறை

ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்த மைதா மாவு, பிரவுன் சுகர், சீனி, பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி எல்லாம் சேர்த்து மொத்தமாக கலந்துகொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில் மோர், முட்டை,எண்ணெய் இவற்றை லேசாக அடித்துக் கொள்ளவும். நிறைய நேரம் அடிக்க வேண்டாம்.

இந்தக் கலவையை மாவு கலவையுடன் ஊற்றிக் கலக்கவும். இதையும் வேகமாக அடிக்க வேண்டாம். நன்றாக கலந்தால் போதும் .

வெண்ணை தடவி அதன் மேல் பேக் செய்வதற்காக உள்ள பேப்பர் போடவும். அதனுள் மாவுக் கலவையை ஊற்றவும். அதன் மேல் ஏற்கனவே செய்து வைத்த வால்நட் கலவையைத் தூவவும். 190 டிகிரி செல்சியஸில் 45 நிமிடத்திற்கு பேக் செய்யவும். பேக் ஆனவுடன் எடுத்து ட்ரேயில் 10 நிமிடத்திற்கு ஆற வைத்திருக்கவும். 10 நிமிடம் கழித்து ட்ரேயில் இருந்து எடுத்து 30 நிமிடங்களாவது ஆறவிட்டு அதன் பின் துண்டுகள் போடவும்.

கேக் செய்யும்போது கவனிக்க வேண்டியவை: எல்லாப் பொருட்களும் குளிர்ச்சியாக இருக்கக்கூடாது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here