நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்: கவுண்டமணி

Actor Goundamani lodges police complaint against YouTube channel that put out report that said he was unwell

0
134

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாரோ சிலர் வதந்தி கிளப்பி விட்டுள்ளார்கள். 

இந்த விஷயம் குறித்துக் கேள்விப்பட்டு கவுண்டமணி கோபம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து கவுண்டமணி தனது வழக்கறிஞர் மூலம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கவுண்டமணி  கூறியிருப்பதாவது: சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். 82 வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

சில யு டியூப் சேனல்கள் எனது உடல்நிலை கடுமையாக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது முற்றிலும் தவறான செய்தி. நல்ல ஆரோக்கியத்துடன் எனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறேன்.

இதுபோன்ற தவறான மற்றும் அவதூறான செய்திகளால் நானும் எனது குடும்ப உறுப்பினர்கள், ரசிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை பரப்பிய சேனல்களை தடை செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொய் செய்தியை சம்பந்தப்பட்ட சேனலில் இருந்து நீக்க வேண்டும்.

என அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here