கவிஞரும், தமிழ் பேராசிரியருமான அப்துல் ரகுமான், வெள்ளிக்கிழமை (இன்று) அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவு இரண்டு மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இன்று அதிகாலை சென்னையில் காலமானார். கவிஞர் அப்துல் ரகுமானின், இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 4ஆம் தேதி) நடக்கவிருக்கிறது

இதையும் படியுங்கள்: கவிக்கோ 75

கவிக்கோ அப்துல் ரகுமான், மதுரை மாவட்டத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி’ 1974ஆம் ஆண்டு வெளிவந்தது. 1999ஆம் ஆண்டில், ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்காக இவர், சாகித்ய அகாடமி விருது வென்றார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். . வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 முதல் 2011ஆம் ஆண்டு வரை இருந்தார்.

இதையும் படியுங்கள் : ஐஃபோன்களை பின்னுக்குத் தள்ளிய ரெட்மி, விவோ ஃபோன்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்