கவனமாக பேசுங்கள் : யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

0
204



இந்திய ராணுவம், பிரதமர் மோடியின் சேனை என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், இனி தேர்தல் பிரசாரத்தில் மிகவும் கவனமாகப் பேசுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.  அவரது பேச்சுக்காக வேறு நடவடிக்கை எதையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள்; ஆனால், பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே பரிசாக வழங்குகிறார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக (ராணுவமாக) உள்ளது என்று பேசினார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆதித்யநாத்தின் பேச்சு அடங்கிய வீடியோவை அளிக்குமாறு காஜியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட வீடியோவை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, தனது பேச்சு குறித்து விளக்கமளித்து யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினார். 
எனினும், அந்த விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், எதிர்காலத்தில் யோகி ஆதித்யநாத் இதுபோன்ற பேசக் கூடாது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது . 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here