கழிவுநீர்த்தொட்டிக்கு ஒரு மனிதரை இறக்கி அவர் விஷவாயுவில் இறக்கச் செய்வது வேறு எங்கும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக கண்டித்தது. 

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தண்டனை சட்டத்தை சீராய்வு  செய்வது குறித்து மனுவில் உச்ச நீதிமன்றம் கருத்துக்களை கூறியுள்ளது.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதி பாகுபாடி இன்னும் நாட்டில் தொடர்கிறது.  இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது. 

மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை , வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக  பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை? 

கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள். 

கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனித  தன்மையற்றது. இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். 

இந்திய அரசியலமைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது. நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்று தானே  பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இது போன்ற கொடுமை நடந்து வருகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here