உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்ததவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார்.

இலங்கை பத்திரிக்கைக்குஅளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் அந்த ஓவரின் 4வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, குப்டிலின் கைகளில் சிக்கிய பந்தை அவர் விக்கெட் கீப்பருக்கு எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், ஸ்டோக்ஸ் பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது. இதனால் ஆட்டம் டை ஆனது.

இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார்.

ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்த இந்த தீர்ப்பினைக் குறித்து பலராலும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில்,  இலங்கை பத்திரிக்கைக்குஅளித்த நேர்காணலில் ” தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடையதீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணிசெய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை.” என்று கூறி உள்ளார்.

மேலும்அவர், “நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதைமற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்கமுடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள்என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவைவெளிப்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here