வரைவு தேசிய கல்விக் கொள்கை குறித்த திமுகவின் ஆய்வறிக்கையானது திமுக எம்.பிக்கள் குழுவினரால் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள  புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி  விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட  தி.மு.க. சார்பில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி – முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு – தமிழக அரசு உயர்கல்வி மன்ற முன்னாள் துணைத் தலைவர் முனைவர் அ.இராமசாமி – தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர், முனைவர் ம.இராஜேந்திரன் – பச்சையப்பன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி – கழக  மாணவர் அணிச் செயலாளர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ.,. – சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தை டாக்டர் ரவீந்திரநாத் – பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு – தருமபுரி தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி., –  சமூக செயற்பாட்டாளர் முனைவர் திருமதி சுந்தரவள்ளி  ஆகியோரைக் கொண்ட ஒரு ஆய்வுக் குழுவினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் 14-7-2019 அன்று அமைத்தார்.

இந்த  ஆய்வுக் குழுவானது பத்து நாட்களுக்குள் மேலாக ஆய்ந்து, கலந்தாலோசித்து உருவாக்கிய தனது அறிக்கையினை,  மு.க.ஸ்டாலினிடம் கடந்த 26-7-2019 அன்று ஒப்படைத்தது.

இந்நிலையில் திமுகவின் ஆய்வறிக்கையானது திமுக எம்.பிக்கள் குழுவினரால் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

திமுக எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவானது, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை அவரது அலுவலகத்தில் திங்கள் மாலை சந்தித்து, திமுகவின் ஆய்வறிக்கையினை ஒப்படைத்தது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.