காவலன் செயலியை கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்காக காவலன் செயலியை பெண்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காவலன் செயலி பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.இதற்கான முயற்சிகளில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதன் பயனாக தமிழகம் முழுவதும் 10 லட்சம் பெண்களும், சென்னையில் சுமார் 4 லட்சம் பேர் வரையில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவிகள் ஆவர்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆயிரம் பேரும், திருவள்ளூரில் 35 ஆயிரம் பேரும், கோவையில் 45 ஆயிரம் பெண்களும் காவலன் செயலியை தங்கள் பாதுகாப்புக்காக நாடியுள்ளனர்.

சென்னையில் காவலன் செயலியை பயன்படுத்தி வட சென்னையில் தனது வீட்டுக்கு வந்த 2 பேரை காவலன் செயலி மூலமாக பெண் ஒருவர் பிடித்துக் கொடுத்தார்.

அதேபோல், பாரிமுனையில் பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணை கிண்டல் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here