நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது வயது 34. தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வரும் காஜல்  2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கி பரத் நடித்த பழனி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக டாப் நடிகைகளின் லிஸ்டில் இடம்பெற்றுள்ள சில நடிகைகளில் காஜலும் ஒருவர்.

அதன்பிறகு சிலபல படங்களில் நடித்தவருக்கு 2009 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் நடித்த மஹதீரா படம் தான் பெரிய ப்ரேக் கொடுத்தது. காஜல் தெலுங்கில் டாப் நடிகைகள் லிஸ்டில் சேர்ந்தது இந்த மஹதீர படத்துக்குப் பிறகுதான்

தற்போது அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் அவசரப்படுகிறார்கள்.

இந்நிலையில், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல், தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதகத் தெரிவித்தார்.

வழக்கம்போல் காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்படுகிறது. அந்த மாப்பிள்ளையை காஜல் தேர்வு செய்யவில்லையாம். மாறாக அவரின் பெற்றோர் பார்த்து காஜலுக்கு அறிமுகம் செய்து வைத்தார்களாம்.

நான் நிச்சயம் திரையுலகை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று காஜல் முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் அவர் தொழில் அதிபரை மணக்க உள்ளார்.
காஜல் தனக்கு விரைவில் திருமணம் என்று கூறியபோதே யாராவது தொழில் அதிபராகத் தான் இருக்கும் என நினைத்ததாக ரசிகர்கள் வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். அது ஏன் நடிகைகள் எல்லாம் தொழில் அதிபர்களையே திருமணம் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் மேலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாஸன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here