மூச்சு பெரும் வரம்;
பேச்சு பேரருள்.
ஓர் உயிர்
ஒரு சமூகத்தைக்
கைதூக்கிவிட முடியும்,
கைவிடவும் செய்யும்
என்ற தோற்றத்தை
உருவாக்கியது
உன் அதிகாரம்,
உன் எழுத்து.
நீ யாரைப் போலவும்
சக உயிர்;
சக்தியின் வடிவம்
என்கிற
பெரும் தருணம் இது.
எளியவர்கள்
ஏற்றம் பெற முடியும்
என்ற
நம்பிக்கை நீ.
ஒதுக்கியவர்களாலேயே
முன்வரிசையில்
கவுரவிக்கப்பட்டவன் நீ.
உன் கதை
ஏதுமில்லாத எங்களை
உயர்த்தும்.
(This poem originally appeared on July 30, 2018)
