கலிபோர்னியாவில் 11 இடங்களில் காட்டுத்தீ

0
169
A firefighter sprays down the smoldering remains of a burning home in San Bernardino, California, on Thursday. Photograph: Josh Edelson/AFP via Getty Images

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அடுத்தடுத்து 11 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதால், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கலிபோர்னியா பகுதிகளில் கடந்த மாதம் (அக்-21)ஆம் தேதி முதல், வறண்ட வானிலை காரணமாக தீப்பற்றி எரிந்து வருகிறது.

சூறைக்காற்றும் வீசி வருவதால், பல இடங்களில் தீ பரவியுள்ளது. இதனால் தீப்பற்றி எரியும் பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வெளியேற்றி, தீயணைப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், நேற்றிரவு மலையடிவாரத்தில் உள்ள சான் பெர்னார்டினோ பகுதியில் திடீரென தீப்பற்றி, அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அங்கிருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் சுமார் 7,000 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here