ஹானர்  நிறுவனம்  இந்தியாவில் தனது புதிய ‘ஹானர் பேண்ட் 5’ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஃபிட்னஸ் பேண்ட், நவீன தொழில் நுட்பங்களுடன் குறைந்த விலையில் பயனர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்துள்ளது.

இந்த புதிய ‘ஹானர் பேண்ட் 5’ ஃபிட்னஸ் பேண்ட் AMOLED கலர் ஸ்கிரீன், ஸ்டைலான வாட்ச் மற்றும் கன்டினிவஸ் ஹார்ட் ரேட் மாணிட்டரிங் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. முன்னதாக, இந்த ‘ஹானர் பேண்ட் 5’ கடந்த மாதம் சீனாவில் முதன்முறையாக அறிமுகமானது.

ஹானர் பேண்ட் 5 ஃபிட்னஸ் பேண்டை உங்கள் ஸ்மார்ட்போன் புளூடூத் வழியாக ஹிவாவே ஹெல்த் செயலி ஆப் மூலம் இணைத்துக் கொள்ளலாம். பல உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களை வழங்குவதைத் தவிர, ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியும். மேலும், உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அதை இந்த ஸ்மார்ட் பேண்ட் மூலம் கண்டுபிடிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹானர் பேண்ட் 5 ஏழு நவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பேண்ட் முழு வண்ண AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த பேண்ட்டில் ஸ்டைலான வாட்ச் அமைந்துள்ளது. ட்ரூசீன் 3.0 (TruSeen 3.0) ஹார்ட் ரேட் மானிட்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரவில் இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கிறது.

மேலும், 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டன்ட் திறன், நான்கு வகையான நீச்சல் ஸ்டைல்கள் (ஃப்ரீஸ்டைல், பட்டாம்பூச்சி, மார்பக ஸ்ட்ரோக் மற்றும் பேக்ஸ்ட்ரோக்) ஆகியவற்றை அடையாளம் காணக்கூடிய திறன் இந்த் ஸ்மார்ட் பேண்டுக்கு உண்டு.

இந்தியாவில் இந்த ‘ஹானர் பேண்ட் 5’ ஃபிட்னஸ் பேண்ட் ரூ.2,599 க்கு விற்பனையாகவுள்ளது. மேலும் இந்த பேண்ட் மிட்நைட் நேவி (Midnight Navy), கோரல் பிங்க் (Coral Pink) மற்றும் மெடியோரைட் பிளாக் (Meteorite Black) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

ஃப்ளிப்கார்ட் மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த பேண்டின் விற்பனை தொடங்கியுள்ளது.